இது மொத்தத்தில் எதைப் பற்றியது?

இலங்கையின் அமைவிடம், அதன் தரைத்தோற்ற அமைப்புக்கள், மலைகள், ஆறுகள் மற்றும் அயனமண்டல காலநிலை நிகழ்வுகள் போன்ற காரணங்களால் நாம் கடுமையான மழைவீழ்ச்சி, வெள்ளங்கள், நிலச்சரிவுகள் போன்ற சீரற்ற காலநிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை அழிவுகளுக்கு முகங்கொடுக்கிறோம். நீண்டகாலமாக எமது காலநிலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் எமக்கு பழக்கப்பட்டுள்ள காலநிலை போக்குளை மாற்றியுள்ளன. அத்துடன், எமது நலனகளை பாதிக்கின்ற வித்தியாசமான, அடிக்கடி மாறுகின்ற, சீரற்ற காலநிலையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தீவிர காலநிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும் போது அவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளாதிருந்தால் அதிகமான குடும்பங்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இது எமது நலன்களை பாதிக்கும். ஏனெனில், நாம் எமது நலன்களுக்காக எமது பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மூத்தோரிலேயே தங்கி வாழ்கிறோம். இத்தகைய இயற்கை அழிவுகளின் போது எமது சில முக்கிய தேவைகள் நிறைவேறுவதில்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். பெரும்பாலும் நீண்ட காலத்துக்கு பாடசாலைக் கல்வியை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரு பேராபத்தின் போது சிறுவர் பாதுகாப்பு சேவைகளில் இடைவெளிகளை அவதானிக்கிறோம். எமது சக சகோதரர்களும் சகோதரிகளும் துயருறுவதை காண்கிறோம். ஒரு பேராபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றன. தீவிர காலநிலை மற்றும் இடர் நிலை என்பது எமது பெற்றோருக்கு தமது வேலைகளை, பணிகளை நிறைவேற்ற முடியாமை, எமது வாழ்வாதாரங்களை இழத்தல் மற்றும் எமது குடும்பங்கள் வழமையான வருமானங்களை இழத்தல் என்பனவாகும். இவ்வாறு வருமானம் இழந்தால் நாம் நீண்டகாலத்துக்கு அதன் பாதிப்புக்களை உணர்கிறோம்.

அடுத்தது