இடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு இசைவாக்கமடைதல் தொடர்பான இலங்கை சிறுவர் பிரகடத்தின் தீர்மானங்கள - VIDEO

உறுப்புரை 1: சகல சிறுவர்களுக்கும் அனைத்து காலங்களிலும் பாதுகாப்பானதொரு சூழலில் தொடர்ச்சியாக கல்வி கிடைக்க வேண்டும்.

உறுப்புரை 2: இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்துடன் இசைவாக்கமடைதல் தொடர்பாக திட்டங்களை தயாரித்து அமுல்படுத்தும் போது சிறுவர்களின் கருத்துக்கள், ஆர்வங்கள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது

உறுப்புரை 3: அனைத்து அபிவிருத்தி பணிகளும் நிலைபேறாக இருக்க வேண்டுமென்பது

உறுப்புரை 4: அனர்த்த முன்னறிவிப்பு முறைமைகளை விருத்தி செய்யும் போது சிறுவர்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

உறுப்புரை 5: அனர்த்த நிலைமைகள் மற்றும் அவசர எதிர்ச்செயலாற்றலின் போது அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

உறுப்புரை 6: அனர்த்தத்தில் பாதிக்கப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக நிதியுதவி கிடைக்க வேண்டும்.