பாடசாலையில் ஆரோக்கியம் பேணுதல்
பாடசாலையில் ஆரோக்கியமான பழக்கங்கள்.
ஓய்வின்றி தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய ஒரு பாடசாலை நாளைக் கழிப்பதற்கு உங்களிடம் ஆற்றலும் வலிமையும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆரோக்கியமான காலையுணவை உட்கொள்வதோடு ஆரோக்கியமான பகலுணவையும் எடுத்துச்செல்வது சிறந்த வழிமுறைகளாகும். சிலவேளை பாடசாலையில் இருக்கின்ற சிற்றுண்டிச்சாலையில் நீங்கள் பகலுணவை உண்ண விருப்பமாக இருக்கலாம். அப்போது ஆரோக்கியமான தெரிவுக்காக குறித்த சிற்றுண்டிச்சாலைகளில் இருக்கும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் பற்றி அறிந்திருப்பது நல்லது.
சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கியமான உணவைத் தெரிவுசெய்தல்.
சிற்றுண்டிச்சாலைகளில் உங்களுக்கு தெரிவுசெய்ய முடியுமான ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது. பல்தானிய உணவுகள், சமோஷா, ரோல்ஸ் போன்றன. ஆரோக்கியமான நிரப்பல்களில் சலாது, கொழுப்பில்லாத கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி, மீன், முட்டைகள் அல்லது உளுந்து வடை போன்றன உள்ளடங்குகின்றன. இங்கே ஆரோக்கியமான சூட்டுணவுகளுக்கான சில தெரிவுகள் தரப்பட்டுள்ளன.
- புதிய சூப்புடன் சமோசா
- பருப்பு/ உளுந்து மற்றும் சோளம் கலந்து தயாரித்த உணவுடன் சேர்த்து ஒரு துண்டு ஆனைக்கொய்யா
- சோறுடன் மரக்கறி, கோழி அல்லது மாட்டிறைச்சிக் கறி
பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையிலிருந்து இடையுணவு ஏதும் தேவைப்பட்டால் கீழுள்ள தெரிவுகளைத் தெரிவுசெய்யவும்:
- பழச் சாலாடுகள் அல்லது முழுப் பழம்
- கொழுப்பு குறைந்த யோகட் மற்றும் பழம்
- (எண்ணெய்யில் பொரிக்காத) பொப்கோர்ன்.
- மரக்கறி குச்சிகள், அவித்த முட்டைகள்
- உலர்த்திய பெரிய திராட்சை அல்லது புருட் ப்ரட்
வீட்டிலிருந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு செல்வது சிறந்தது. பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையிலிருந்து மென்பானங்களை வாங்குவதை விட இது மலிவானதும் ஆரோக்கியமானதும் ஆகும். உங்களுக்கு சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஏதும் குடிபானம் வாங்க வேண்டியிருப்பின் நீர் அல்லது கொழுப்பு குறைந்த பால் மற்றும் சோயா பானத்தைக் கொள்வனவு செய்யவும்.
சிற்றுண்டிச்சாலைகளில் காணப்படுகின்ற ஆரோக்கியமற்ற உணவுகளும் பானங்களும்
சிலவேளை உணவுகள் அதிகளவு சீனி, பூரிதக் கொழுப்பு மற்றும் உப்பு கலந்த உணவுகளாக இருக்கும். அதிகமான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் இவ்வகை உணவுகளைக் காணலாம். இவை ஆரோக்கியமான உணவுகளல்ல. இவை உங்களுக்கு குறுகிய நேர வலிமையைத் தந்தாலும் நாள் முழுவதும் உங்களைக் களைப்படையச் செய்யும். நீங்கள் அதிகளவு உட்கொள்ளும் போது ஆரோக்கியமற்ற முறையில் உங்களின் எடையை அதிகரிக்கச் செய்யும்.
- சிப்ஸ், கோழி நகட்ஸ் உள்ளடங்கலாக ஆழமாக பொறித்த உணவுகள்.
- மன்டாஸிஸ், சொஸேஜஸ் ரோல்ஸ் மற்றும் பேஸ்ட்ரி, கேக், டோனட் சொக்கலட் மற்றும் இனிப்புப் பண்டங்கள்
- கோர்டியல், சுவையூட்டப்பட்ட நீர், விளையாட்டு நீர், விளையாட்டு குடிபானங்கள், சக்தி மென்பானங்கள், சுவையூட்டப்பட்ட பால்கள், பழச்சாறு.
- கோப்பிப் பானங்கள் – கோப்பி சுவையூட்டப்பட்ட பால் குடிபானங்கள்.