போசாக்கு என்றால் என்ன?
போசாக்கு என்பது உங்களின் உடற் தேவைகளுக்கேற்ப நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் வகையுமாகும். சிறந்த போசாக்கு என்பது உடலுக்குத் தேவைப்படும் சரியானளவு போசாக்கு உட்கொள்வதென்பதாகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சிறந்த போசாக்கு முக்கியமானது.
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது.
உணவுகளில் பலவிதமான போசாக்குகள் காணப்படுகின்றன. அவையாவன :
- புரதம்
- காபோவைதரேற்று
- கொழுப்புக்கள்
- விற்றமின்கள்
- கனியுப்புக்கள்
ஆரோக்கியமானதொரு உடலுக்கு மேற்கூறப்பட்ட அனைத்து முக்கியமான போசாக்குகளும் தேவைப்படுகின்றன. காபோவைதரேற்று, புரதம் மற்றும் கொழுப்பு தசை வளர்ச்சிக்கும் உடற் பலத்துக்கும் தேவைப்படுகின்றன. கனியுப்புக்கள் மற்றும் விற்றமின்கள் பல்வேறு நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தியாக தொழிற்பட்டு உடலின் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. நீரும் மிகவும் முக்கியமானது.
உணவுகள் முக்கியமான போசாக்குப் பதார்த்தங்களை வழங்குவதனால் அவை இறைச்சி, பாலுணவுகள், பழங்கள் மற்றும் மரக்கறிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, பாலுணவுகள் கல்சியம் மற்றும் புரதத்தினை வழங்குகையில் பழங்களில் விற்றமின் சீ உள்ளடங்கியுள்ளது. வெவ்வேறு வகையான உணவுகளைத் தெரிவுசெய்வதன் மூலம் உங்களின் உணவு வேளைகளை சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் ஆக்கிக்கொள்ள முடியும்.