மனவழுத்தமும் நானும்
மனவழுத்தம் என்பது உங்களின் உடலானது சவால்களை எதிர்கொள்ளும் முறையாகும். அதாவது, சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களின் அவதானம், சக்தி மற்றும் பலத்தைத் தயார்படுத்தும் முறையாகும். இளம் பருவத்தினருக்கு மனவழுத்தம் வசதியானதாக இல்லாவிட்டாலும் அது தன்னளவில் மோசமானதல்ல. சிலவேளைகளில், ஒரு நடவடிக்கையில் ஈடுபமாறு எம்மை வலுக்கட்டாயப்படுத்தவும் ஒரு வேளையை மிகவும் சிறப்பாக நிறைவேற்ற எம்மை ஊக்குவிக்கவும் மனவழுத்தம் அவசியமாகும்.
நாம் அதிகமான சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் போது அவற்றை சமாளிப்பதற்குத் தேவையான வளங்கள் இல்லாதபோது மனவழுத்தம் கஷ்டமாக இருக்கும். இந்நிலைமைகளில் நாம் எப்போதும் மனவழுத்தம் பற்றியே பேசுவோம்.
மனவழுத்தம் உங்களின் சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மனவழுத்தத்தின் அறிகுறிகள்
மனவழுத்தம் உங்களின் உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, நீங்கள்
- உணர்ச்சிவசப்படுதல்,
- மனவுறுதியின்மை,
- கண்ணீர் நிறைதல்,
- கவலை,
- உடனடியாகக் கோபப்படுதல்,
- மனச்சோர்வு, அல்லது
- நம்பிக்கை இழந்த நிலை போன்ற உணர்வுகளை உணரலாம்.
மனவழுத்தம் எமது உடலைப் பாதிக்கும். அந்தவகையில் உங்களுக்கு,
- தலைவலி,
- தோற்பட்டை வலி,
- வயிற்று அல்லது தாடை வலி,
- அடிக்கடி தடிமன் அல்லது தொற்றுக்கள்,
- எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு,
- மயக்கம். அல்லது
- வேசமாக மூச்செடுத்தல் போன்ற குணங்குறிகளைக் காட்டலாம்.
மனவழுத்தம் நாம் நினைக்கும் பாணியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில், உங்களுக்கு
- கிரகித்தல்,
- நினைவில் வைத்துக்கொள்ளல்,
- ஒழுங்குபடுத்துதல்,
- திட்டமிடுதல், அல்லது
- தீர்மானங்களை மேற்கொள்வது சிரமமாக இருக்கும்.
நீங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பிரச்சனைகளிலேயே நேரத்தை செலவிடுவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன் உங்களுக்கு சிந்தனையின் வேகத்தைக் குறைப்பதோ அல்லது அதனை இல்லாமல் செய்வதோ சிரமமாக இருக்கும்.
மனவழுத்தம் உங்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. நீங்கள்,
- விரும்பும் நடவடிக்கைகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொள்ளலாம்,
- பாடசாலைக்குச் செல்வதை மறுக்கலாம், அல்லது
- நன்றாகப் படிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்.
மனவழுத்தத்துடன் இருக்கும் மக்கள் தீவிர நிலைகளிலேயே வாழ்கின்றனர் :அவர்கள் ஒன்றில் தொடர்ந்து அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருப்பார்கள் அல்லது கட்டிலை விட்டு எழுவது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். மிகவும் குறைவாக அல்லது மிகவும் அதிகம் தூங்குவதால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படலாம். சிலர் வலி நிவாரணி மருந்துகளைப் பாவிக்கலாம் அல்லது மதுபானம் அல்லது ஏனைய போதைப்பொருட்களைப் பாவிக்கலாம். அவர்கள் அடுத்தவர்களுக்கு அல்லது அடுத்தவர்களின் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தலாம்.
மனவழுத்தத்துக்கான காரணங்கள்
இளம் பருவத்தினருக்கு அதிகமான விடயங்கள் அழுத்தத்தை ஏற்படுத்தும். அவற்றில் உள்ளடங்கக்கூடியவை :
- பாடசாலை, வீட்டு வேலைகள், பரீட்சைகள், மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருத்தல்.
- பட்டமளிப்பு, பல்கலைக்கழகம் அல்லது தொழில் போன்று வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள்,
- அதிக வேலைப்பழுவுடன் இருத்தல்
- தயார்நிலையில் இல்லாதிருத்தல் அல்லது சில விடயங்களை எவ்வாறு செய்வதென விளக்கம் இல்லாதிருத்தல்.
மனவழுத்தத்தினை ஏற்படுத்தும் மேலும் சில காரணிகளாக குறைவான தூக்கம் மற்றும் உணவு உண்ணும் முறை (poor sleep and diet,), அதிர்ச்சி அல்லது சூழ்நிலை மாற்றம், அத்துடன் ஒரு நண்பன் அல்லது குடும்ப உறுப்பினரின் மரணம் என்பவற்றையும் சுட்டிக்காட்டலாம்.
மனவழுத்தத்துக்குத் தீர்வுகாண இவ்வளங்களைப் பயன்படுத்துங்கள்.