மனச்சோர்வு
கவலையை உணர்வது அல்லது எண்ணங்கள் ஊசலாடுவது இளம் பருவத்தினருக்கு சாதாரணமானது. இளமை என்பது சவால்களுக்கு முகங்கொடுக்கும் பருவமாகும். நீங்கள் பெரும்பாலும் ஏற்கனவே செய்தவற்றை அனுபவிக்க முடியாதவாறு வயதில் கூடியவராகவோ அல்லது உங்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய முடியாதவாறு வயது குறைந்தவராகவோ இருக்கலாம். அனைத்தும் மாற்றமடையக்கூடியவை.
இளம் பருவத்தினருக்கு மத்தியில் இருக்கும் மனச்சோர்வினைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். மனச்சோர்வுடன் இருக்கும் மக்கள் :
- கவலை, கண்ணீர் விடுதல், மந்தம் அல்லது எரிச்சலை உணர்கின்றவர்களாக இருக்கலாம்.
- ‘வெறுமை” அல்லது “இயக்கமற்ற” தன்மையை உணரக்கூடியவர்களாக இருக்கலாம். இது காலை நேரத்தில் பெரும்பாலும் மிகவும் மோசமாக இருக்கும்
- முன்பு மகிழ்ச்சிப்படுத்திய விடயங்கள் தற்போது அதே உணர்வைத் தராதிருத்தல்.
- கோபத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
- தம்மை அற்பர்கள் அல்லது குற்றவாளிகள் என உணர்வதுடன் தம்மைத் தாமே குறை கூறிக்கொள்வார்கள். மேலும், “இது எனது தவறு“ அல்லது நான் தோல்வியடைந்து விட்டேன் ” போன்ற கூற்றுக்களைக் கூறிக்கொள்வார்கள்.
- நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்ந்துகொள்வார்கள்.
- தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளல் அல்லது தற்கொலை செய்துகொள்ளல் உள்ளிட்ட ஆணித்தரமான எதிர்மறை எண்ணங்கள் அவர்களிடம் இருக்கும். அவர்கள் ”வாழ்ந்து பிரயோசனமில்லை” அல்லது ” எனக்கு இதனை மீண்டும் செய்யவே முடியாது” என்று நினைப்பார்கள் அல்லது கூறுவார்கள்.
மனச்சோர்வு கீழே குறிப்பிடுகின்ற உடல் ரீதியான அறிகுறிகளுக்கும் காரணமாக இருக்கலாம்
- களைப்பு, பலமின்மை, ஊக்கமின்மை.
- உணவில் நாட்டம் அல்லது எடையில் மாற்றங்கள்
- நிச்சயமற்ற அல்லது விளங்கப்படுத்த முடியாத உடல் ரீதியான பிரச்சனைகள் – உதாரணம் வயிற்றுவலி மற்றும் தலைவலி.
- நித்திரை சம்பந்தமான பிரச்சனைகள் – உதாரணம் விழித்தெழுவது அல்லது விழித்திருப்பதில் கஷ்டம்.
மனச்சோர்வுடனுள்ள மக்களுக்கு கிரகித்தல், தீர்மானங்களை மேற்கொள்ளல், பிரச்சனைகளைத் தீர்த்தல் அல்லது தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ளல் என்பன சிரமமாக இருக்கும்.
மனச்சோர்வினை இனங்காண்பதற்கு பெரும்பாலும் பயிற்றப்பட்ட துறைசார் தொழில் வல்லுநரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.