மனச்சோர்வும் பதற்றமும்
விஷேடமாக, இளம் பராயத்தில் இருக்கும் நாம் கவலை, துயரம் அல்லது மனவழுத்தத்தினை உணர்வது சாதாரணமானது. இந்த உணர்வுகள் நல்ல தொடர்புகளுடன் ஆரோக்கியமாக வாழவிடாமல் உங்களைத் தடுக்கும் போது மாத்திரமே அவை உளநலப் பிரச்சினைகள் என கருதப்படுகின்றன. என்றாலும், அவ்வுணர்களின் தாக்கம் உங்களின் வாழ்க்கையில் தீவிரமடையும் போது நீங்கள் உளநலக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம்.
பல வகையான உளநலக் கோளாறுகள் இருப்பதோடு அவற்றுள் சில ஏனையவற்றை விட பொதுவானவை.
இன்று இளம் பருவத்தினர்களுக்கு மத்தியில் பொதுவாகக் காணக்கூடிய இரண்டு உளநலக் கோளாறுகள் மனச்சோர்வும் பதற்றமும் ஆகும். ஒருவருக்கு உளநலக் கோளாறு இருக்கின்றதா என ஒரு வைத்தியருக்கு அல்லது உள நலத் தொழில் வல்லுநருக்கு மாத்திரமே கூற முடியும். என்றாலும், இவ்விடயங்கள் தொடர்பாக அறிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். அவ்வகையல் குறித்த இரண்டு நிலைமைகளும் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.