Local resources.png

தேசிய மனநல சுகாதார வளங்கள்

உங்களுக்கு அல்லது உங்களுக்கு அறிமுகமான ஒருவருக்கு ஏதேனும் மனநல சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தால், தேவையான உதவிகளைப் பெறுவதற்கென பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. எனவே, உங்களுக்கு, நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள வளங்களைப் பயன்படுத்துங்கள்.

தேசிய மனநல சுகாதார நிலையம் இலங்கை https://nimh.health.gov.lk

  • இலங்கையில் மனநல ஆரோக்கியத்திற்கான மிகப் பெரிய வைத்தியசாலை.
    • முகவரி : NIMH, முல்லேரியாவை புது நகர்.
    • தேசிய மனநல சுகாதார உதவிச் சேவை :1926 (கட்டணமற்றது).

சுமித்ரயோwww.sumithrayo.org

  • மனநல சுகாதாரத்துடன் போராடுகின்றவர்களுக்கு இலவசமாக உணர்வுபூர்வமான ஆதரவினை வழங்கும் தொண்டு நிறுவனம்.
    • முகவரி இல. 60, பீ. ஹோர்டன் பிரதேசம், கொழும்பு-07.
    • துரித அழைப்பு இல. : 011 2692909 / 011 2696666/ 011 2683555
    • மின்னஞ்சல் முகவரி : sumithra@sumithrayo.org

மெல் மெதுர www.melmedura.org

  • சுமித்ரோ தொண்டு நிறுவனத்துடன் இணைந்த மெல்மெதுர நிறுவனம் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உதவி செய்கின்றது.
    • முகவரி இல. 60, பீ. ஹோர்டன் பிரதேசம், கொழும்பு-07.
    • துரித அழைப்பு : 011 2693 460 / 011 2694 665 / 071 430 7799
    • மின்னஞ்சல் முகவரி : melmedura@sltnet.lk


CCC Foundation Inc. (Sri Lanka) – www.1333.lk

  • CCCline என்பது இலங்கையின் இலவச ஆலோசனைச் சேவையாகும். இது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நபர்களுடன் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி கதைப்பதற்கு முன்வரும் நபர்களுக்கு உணர்வுபூர்மான உதவிகளையும் வழிகாட்டலையும் வழங்குகின்றது.
    • முகவர் இல. 379/4, காலி வீதி, கொழும்பு 03
    • துரித அழைப்பு இல. (கட்டணமற்றது) : 1333

சாந்தி மார்க்கம் - https://shanthimaargam.org

  • அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடிய கட்டிளமைப் பருவத்தினர், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் உணர்வு ரீதியான அதிர்ச்சிகளைக் குணப்படுத்தி வன்முறையைக் குறைப்பதற்கு முயற்சிக்கும் இலங்கையில் பதிவுசெய்துள்ள அரச சார்பற்ற அமைப்பாகும்.
    • முகவரி 69/17, கோதமீ வீதி, கொழும்பு -08.
    • மின்னஞ்சல் முகவரி : shanthimaargam@gmail.com

Women in Need Sri Lanka – www.winsl.net

  • இலங்கை முழுவதும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் முகங்கொடுக்கும் வீட்டு வன்முறைகள், கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், இணையவழி வன்முறை, வீதித் தொந்தரவுகள் மற்றும் வேறு விதத்திலமைந்த வன்முறைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உள்நாட்டு இலாப நோக்கற்ற மற்றும் அரச சார்பற்ற அமைப்பாகும்.
    • முகவரி இல. 25, ரிக்கல் வீதி, கொழும்பு 08
    • ணி நேர துரித அழைப்பு : +94 77 567 65 55
    • மின்னஞ்சல் : connect@winsl.net

For specific support learn more through the topics below:

முந்தையது