மூச்சுப் பயிற்சிகள்

அவ்வப்போது கவலைப்படுவதும் வருத்தப்படுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே, அச்சம், பதற்றம், மனவழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்படுதல் ஆகிய நிலைமைகளில் எவ்வாறு அமைதியடைவதென அறிந்திருப்பது நல்லதொரு வாழ்க்கைத்திறனாகும். அந்த வகையில், அமைதியடையவும் தளர்வுறவும் பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. மிகவும் இலகுவானதும் விரைவானதுமான முறை ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியாகும்.

Self-care.png

கோபம், மனவழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ளதொரு நுட்பம் ஆழமாக மூச்செடுத்தலாகும். மெதுவாக மூச்செடுப்பது உடலைத் தளர்த்துவதுடன், அமைதியை உணர உதவுவதுடன் விடயங்களைச் சமாளிக்கும் ஆற்றலையும் தருகின்றது. உங்களின் மனவெழுச்சிகள் கட்டுப்பாட்டை மீறுவதாக நீங்கள் உணரும் போது உங்களை அமைதிப்படுத்துவதற்கு பெட்டி மூச்சுப் பயிற்சி உதவும். பெட்டி மூச்சுப் பயிற்சியின் படிமுறைகளாவன

  1. மூச்சை இழுத்தல்,
  2. நிறுத்தி வைத்துக்கொள்ளல்,
  3. வெளியே விடுதல்,
  4. நிறுத்தி வைத்துக்கொள்ளல்.

ஒவ்வொரு படிமுறையும் நான்கு செக்கன்கள் நீடிக்கும் . தொடர்ந்து செய்யவும்

தயாராகுங்கள்

உங்கள் மீது கவனம் செலுத்த 10 வரை எண்ணுங்கள்.

தரை மீது உங்கள் பாதங்களைத் தட்டையாக வைத்திருக்கும் அமர்வில் அல்லது தரை மீது மல்லாந்து படுத்திருக்கும் நிலையைத் தெரிவுசெய்யவும்.

வயிற்றின் மீது உங்கள் கைகளை வைத்து உதடுகளை மூடிக்கொள்ளுங்கள்.

படிமுறை 1 – மூச்சை உள்ளிழுத்தல்

உங்களின் மூக்கினூடாக மூச்சை உள்ளிழுத்து நான்கு வரை எண்ணுங்கள். காற்றினை நீங்கள் கைகளை வைத்திருக்கும் வயிற்றுப் பகுதி வரை கீழே இழுத்துச்செல்ல முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு மூக்கினூடாக சௌகரியமாக மூச்சிழுக்க முடியாதெனின் அதற்குப் பதிலாக வாயினூடாக மூச்சிழுப்பதில் பிரச்சினையில்லை.

1....

2....

3....

4....

படிமுறை 2 – உங்களின் மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளவும்.

நுரையீரல் நிரம்பிய நிலையில் 4 எண்ணும் வரை மூச்சை நிறுத்தி வைக்கவும்.

1....

2....

3....

4....

படிமுறை 3 – மெதுவாக மூச்சை வெளியே விடவும்

நான்கிலிருந்து நான்குக்கு எண்ணும் வரை மெதுவாக மூச்சை வெளியே விடவும்.

1....

2....

3....

4....

படிமுறை 4 – உங்களின் மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளவும்.

உங்களின் நுரையீரல் வெறுமையாகும் நிலையில் நிறுத்தி வைத்து நான்கு வரை எண்ணுங்கள்.

1....

2....

3....

4....

முதலாவது படிமுறையை மீண்டும் தொடங்கி மீண்டும் செய்யுங்கள்.

மீண்டும் மூச்சை உள்ளே இழுங்கள். படிமுறை 1 இல் மீண்டும் ஆரம்பித்து 4 வரை எண்ணியவாறு மூச்சை உள்ளிழுங்கள். இச்செயற்பாட்டினை ஒரு நிமிடம் வரை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். கண்களை மூடிக்கொண்டு நீங்கள் அமைதியாக இருக்கும் உருவத்தைக் கற்பனை செய்யுங்கள். உங்களின் உடல் தளர்வடைவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

உத்திகள்:

  • விரைவாக எண்ண வேண்டாம். நான்கு எண்ணுவது உங்களுக்கு சிரமமாக இருந்தால் மூன்றிலிருந்து தொடங்கி முயற்சி செய்யவும்.
  • உங்கள் வயிற்றிலுள்ள கைகள் மேலும் கீழும் நகர்வதை அவதானிக்கவும்இது நீங்கள் சரியாக செய்வதை உணர்த்தும்.
  • இந்த மூச்சுப் பயிற்சியை முழுமையாக ஒரு நிமிடம் செய்யும் விதத்தில் உங்களின் பொறுமையைக் கட்டியெழுப்புங்கள்.
  • நீங்கள் மனவழுத்தத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் பயிற்சி செய்தால் தேவைப்படும் போது உங்களிடம் அத்திறன்கள் இருக்கும்.
  • நீங்கள் பாதகமான ஒரு விடயத்தை உணரும் போது, “நான் ஏதேனும் தீங்கை உணரும் போது அதனை சமாளிப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கிறேன், எனவே, அப்போது தான் கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கான பலம் என்னிடம் இருக்கும், நான் என்னைப் பற்றிப் பெருமைப்படுகிறேன்என உங்களுக்கே கூறிக்கொள்ளுங்கள். பிறகு உங்களையும் உங்களின் மனவெழுச்சிகளையும் கட்டுப்படுத்துவதற்கு உங்களின் மூச்சிழுத்தல் நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.