துன்புறுத்தல்களை சமாளித்தல்
துன்புறுத்தல் என்பது ஒருவர் ஏதாவதொரு நோக்கத்துடன் இன்னொருவருக்கு திரும்பத் திரும்பத் தீங்கிழைப்பதாகும். துன்புறுத்தலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. துன்புறுத்தலின் அறிகுறிகளுள் உடல் ரீதியான காயங்களுக்கு உட்படுதல், பாடசாலையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடல் மற்றும் வீட்டில் கவலைப்படுதல் என்பனவும் உள்ளடங்குகின்றன.
துன்புறுத்தல் என்பது நேரடியாகவும் இடம்பெறலாம். அது இணைய வழியிலும் இடம்பெறலாம். உதாரணமாக, அருவருக்கத்தக்க தகவல்களை அனுப்புதல் அல்லது சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை பகிர்தல். இது இணையவழி துன்புறுத்தலாகும். அனைத்து வகையான துன்புறுத்தல்களும் தீங்கானவை.
நண்பர்களுடனான விவாதம் அல்லது அவர்களுக்கிடையில் இழிவான கூற்றுக்களை பரிமாறிக்கொள்வது துன்புறுத்தலல்ல. துன்புறுத்தல் என்பது திரும்பத் திரும்ப இடம்பெறுகின்ற கீழ்த்தரமான, தீங்கிழைக்கக்கூடிய நடத்தையாகும்.
இங்கு துன்புறுத்தலை சமாளிப்பதற்காக சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
- புறக்கணித்துவி்ட்டு ஒதுங்கி விடுதல்: கேலிபண்ணுகின்ற அல்லது துன்புறுத்துகின்ற மக்களை விட்டு ஒதுங்கிவிடுதல்.
- துன்புறுத்தும் நபருக்கு அதனை நிறுத்துமாறு கூறுதல்: அமைதியாக இருந்து அவர்களின் தந்திரங்கள் வேலைசெய்யாது என தெரியப்படுத்துதல்.
- ஆபத்து நிறைந்த இடங்களைத் தவிர்த்துக்கொள்ளல் : நீங்கள் செய்ய நாடும் விடயங்களை செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காத வரை.
- ஏனையவர்களுடன் சேர்ந்திருத்தல் : நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் போது அந்த நபர் உங்களைத் துன்புறுத்த மாட்டார். ஆசிரியர்கள் இருக்கும் இடங்களில் உங்களுக்கு இருக்கலாம்.
- உங்களுடன் கற்கும் நண்பர்களின் உதவியை நாடுதல் : உங்களுடன் கற்கும் அடுத்த நண்பர்கள் நீங்கள் அனுபவிக்கும் துன்பம் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உங்களிடம் பின்னணி இருப்பதை அறிந்துகொண்டால் துன்புறுத்தும் மக்கள் துன்புறுத்த முயற்சிக்கமாட்டார்கள்.
- ஆசிரியரிடம் எடுத்துரைக்கவும் : பிரச்சனையைச் சமாளிப்பதற்கு ஆசிரியருக்கு உதவ முடியும். ஆசிரியர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதைத் துன்புறுத்தும் நபர் அறிந்திருக்கமாட்டார். துன்புறுத்துவதை கையாளுவது சிரமம். எம்மை விட மூத்தவர்களும் எங்களுக்கு உதவுவதற்கு தயாராகவே இருக்கின்றனர்.