உறுப்புரை 5: அனர்த்த நிலைமைகள் மற்றும் அவசர எதிர்ச்செயலாற்றலின் போது அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இடர் தவிர்ப்பு மற்றும் எதிர்ச்செயலாற்றும் நடவடிக்கைகளை நிறுவும் போது சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இங்கு குழந்தைகள், கட்டிளமைப்பருவ பெண் பிள்ளைகள், மாற்றுத்திறனுள்ள சிறுவர்கள் மற்றும் அவசர நிலைமையின் போது விஷேட தேவைகள் தேவைப்படுகின்ற சிறுவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வலியுறுத்தப்படும். இம்முயற்சிகளில் அனர்த்த மற்றும் அவசர நிலைமைகளின் போது பயனுறுதிவாய்ந்த, வினைத்திறனுடைய சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் சட்ட முறைமைகள் போதியளவு கருத்திற்கொள்ளப்படும்.
அதாவது, ஒரு அவசர நிலைமையின் போது,
- சிறுவர் பாதுகாப்பு முன்னுரிமைப்படுத்தப்படும்.
- சிறுவர் உரிமைகள் மற்றும் அந்தஸ்த்து முன்னுரிமைப்படுத்தப்படும்.
- சிறுவர்களின் வயது, ஆண், பெண் பால்நிலை, மதம், மாற்றுத்திறன்கள் மற்றும் விஷேட தேவைகள் என்பவற்றை கருத்திற்கொள்ளாது தவிர்ப்பு மற்றும் எதிர்ச்செயலாற்றல் நடவடிக்கைகளில் அனைத்து சிறுவர்களும் உள்ளடக்கப்படுவார்கள்.