உறுப்புரை 4: அனர்த்த முன்னறிவிப்பு முறைமைகளை விருத்தி செய்யும் போது சிறுவர்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
அனர்த்த முன்னறிவிப்பு முறைமைகள், வெளியேற்றல் திட்டங்கள், முறைமையின் குறைபாடுகளை மதிப்பிடுதல் மற்றும் மிகச்சரியான நடவடிக்கைகளை அமுல்படுத்தல் உள்ளடங்கலாக அனர்த்தத்துக்கு முகங்கொடுப்பதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை திட்டமிடும் போது சிறுவர்கள், சமூகங்கள் மற்றும் சமூகக் குழுக்களை ஈடுபடுத்திக்கொள்ளல்.
அதாவது:
- முன்னறிவிப்பு முறைகள் மற்றும் வெளியேற்றல் திட்டங்களை வடிவமைக்கும் செயற்பாடுகளில் நாம் பங்கேற்போம்.
- தற்காலிக வெளியேற்றல் பகுதிகளை நிறுவும் செயற்பாடுகளில் நாம் பங்கேற்போம்.
- தற்போது செயற்பாட்டிலுள்ள முன்னறிவிப்பு முறைகளை மதிப்பிடவும் தேவைப்படின் சரியான நடவடிக்கைகளை முன்மொழியவும் நாம் உதவுவோம்.