iogt Kerala-04.jpg

உறுப்புரை 3: அனைத்து அபிவிருத்தி பணிகளும் நிலைபேறாக இருக்க வேண்டுமென்பது

புத்தாக்க, விபரமறிந்த மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவித்தல். அபிவிருத்திப் பணியில் சூழல் மற்றும் ஆபத்து குறைப்பு நோக்குகளை இணைத்துக் கொள்வதுடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைபேறான சுற்றுச்சூழலை சமப்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை ஊக்குவித்தல்.

அதாவது:

  • நிலைபேறான அபிவிருத்திக்கு ஆதரவு திரட்ட நாம் முக்கிய வகிபாகத்தை ஆற்றுகிறோம்.
  • அபிவிருத்தித் திட்டங்களில் நாம் முக்கிய வகிபாகத்தை ஆற்றுகிறோம்.
  • அனர்த்த ஆபத்து மற்றும் அது சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்திற்கொண்டு செயற்படுத்துகின்ற அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் ஆதரவு திரட்டுவோம்.
  • இடர் ஆபத்து குறைப்பு, காலநிலை மாற்றத்துக்கு இசைவாக்கமடைதல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை ஒன்றிணைக்கும் விடயத்தில் புத்தாக்க சிந்தனைகளை பிரயோகிப்பதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம்.
  • நிலைபேறான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது சமூக மட்ட நடத்தை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்போம்.
முந்தையது அடுத்தது