iogt Kerala-05.jpg

உறுப்புரை 2: இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்துடன் இசைவாக்கமடைதல் தொடர்பாக திட்டங்களை தயாரித்து அமுல்படுத்தும் போது சிறுவர்களின் கருத்துக்கள், ஆர்வங்கள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது

இடர் முகாமைத்துவம், ஆபத்து-குறைப்பு மற்றும் காலநிலை மாற்ற மூலோபாயங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை விருத்தி செய்யும் போது சிறுவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளல். இவ்வாறு கொள்கைகள் மற்றும் திட்டங்களை விருத்தி செய்யும் போது கவனத்திற்கொள்ளும் அனைத்து அம்சங்களிலும் சிறுவர்களின் ஈடுபாடு அவசியமானதென ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவும் வேண்டும்.

அதாவது:

  • காலநிலை மாற்றத்துக்கு இசைவாக்கமடைதல் மற்றும் இடர் ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளை விருத்திசெய்ய எமது அறிவினை பயன்படுத்திக்கொள்வோம்.
  • அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றத்துக்காக எமது நாட்டின் தயார்நிலை தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் போது நாம் ஒரு தரப்பினராக இருப்போம்.
  • இடர் ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு நாம் உதவிசெய்வோம்.
முந்தையது அடுத்தது