உறுப்புரை 1: சகல சிறுவர்களுக்கும் அனைத்து காலங்களிலும் பாதுகாப்பானதொரு சூழலில் தொடர்ச்சியாக கல்வி கிடைக்க வேண்டும்.
சகல சிறுவர்களுக்கும் தடங்கலற்ற, பாதுகாப்பான சூழலில் வழங்கப்படுகின்ற, இடர் தயார்நிலை மற்றும் உயிர் காத்தல் திறன்கள் தொடர்பாக இன்றியமையாத தகவல்களை உள்ளடக்கிய கல்வியை பெற்றுக்கொள்வதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளல்.
அதாவது :
- சீரற்ற காலநிலை நிகழ்வுகள் மற்றும் அனர்த்தங்களில் கூட எமக்கு தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்ல முடியும்.
- எமது பாடசாலைகள் பாதுகாப்பாக இருக்குமென்பதோடு நாம் எவ்வகையான இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்.
- எமக்கு பாடசாலைக்கு செல்ல சூழல்-நேய மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறைமை இருக்கும்.
- எமக்கு சிறந்த சுகாதார பராமரிப்பு கிடைக்கும்.
- பாடசாலையில் காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள், அனர்த்த நிலைமையின் போது எவ்வாறு தயார்நிலையிலும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக்கொள்வதுடன் மாறும் காலநிலைக்கு முகங்கொடுப்பதற்கு தேவையான திறன்களையும் பெற்றுக்கொள்வோம.